தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலையு குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், நேற்றைய தினம் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 6,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரப்படி (17.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,920க்கும், ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,865க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,560 ஆகவும், கிராமுக்கு ரூ.7,320 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.97க்கும், கிலோ ரூ.97,000க்கும் விற்பனையாகிறது.
Read more ; நண்பர்கள் குழுவில் கடன் கேட்ட கிரண்..!! பணம் தருகிறோம்… ஒரு நைட் வரியா..? அதிர்ச்சி சம்பவம்..!!