fbpx

அண்ணன் தற்கொலை செய்து கொண்டதால், கதறி அழுத தம்பியும் உயிரிழப்பு!!!

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(26). இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வில் தேர்வு எழுதி இருக்கிறார், அத்துடன் இவர் அருகே உள்ள தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் காதலித்த பெண்ணுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு உண்டானதாகவும், காவலர் தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் அவர் மன வேதனையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மனம் நொந்த தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட துக்கத்தால் கதறி அழுத தினேஷ்குமாரின் சித்தப்பா மகன் வெங்கடேஷ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் உறவினர்கள்.

அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் கதறியழுத தம்பி நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Kathir

Next Post

மீண்டும் பா.ஜ.கவே ஆட்சியை பிடிக்கும்...! வெளியான பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்...!

Tue Dec 6 , 2022
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சி அமைக்கும். குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரும் 8-ம் ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை […]

You May Like