இந்த 2024ஆம் ஆண்டு பலருக்கு பலவிதமான பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கும். ஒரு சிலருக்கு அது நல்ல பாடங்களாக இருக்கலாம், சிலருக்கு இது எப்போதும் போல கடந்து போன ஒரு வருடமாக இருக்கலாம். புதிய ஆண்டு, புதிய தொடக்கங்களுக்கான ஆரம்பமாக இருக்கலாம். பலர் ஏற்கனவே தனது புது வருடத்தை எப்படி தொடங்க வேண்டும் என்று யோசித்து வைத்திருப்பர். ஒரு சிலர், இன்னும் எப்படி தொடங்கலாம் என யோசித்து கொண்டிருப்பர்.
பெரும்பாலான மக்களுக்கு 2024 ஒரு கடினமான ஆண்டாக இருந்தபோதிலும், புத்தாண்டு வருகை அனைவரின் மனதிலும் ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதிய தீர்மானத்துடன் புதிய ஆண்டின் தொடக்கத்திற்கான நேரம் இது. உங்கள் இலக்கை அடைய நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய புத்தாண்டு தீர்மானங்கள் குறித்த சில யோசனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
2025ம் ஆண்டிற்கான புத்தாண்டு ரெசல்யூசன் யோசனைகள் :
புதிய திறமை வளர்த்துக் கொள்ளுதல் : இந்த ஆண்டு நீங்கள் சமையல், தையல் போன்ற எதாவது ஒரு புது திறமைகளையும் கற்றுக் கொள்ளலாம். பணியிடத்தில் பதவி உயர்வு பெற ஒரு பட்டப்படிப்பில் சேரலாம். உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள நீங்கள் கீழ்காணும் தீர்மானங்களை தேர்வு செய்யலாம்.
* ஏதேனும் ஒரு திறனைக் வளர்ப்பது.
* மேல்படிப்பு படித்தல்
* சமையல் கற்றுக்கொள்ளுதல்
* நிலையான நடைமுறைகளை கற்றுக்கொள்ளுதல்
* ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொள்ளுதல்
* புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுதல்
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள் : ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கு உங்களுக்கான நேரம் ஒதுக்குவது மிக அவசியம்.. அதற்காக நீங்கள் எடுக்கும் சில ரெசல்யூசன்கள் உங்கள் அன்றாட நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
* உங்கள் சருமத்தை கண்காணித்து கொள்ளுங்கள்.
* சீக்கிரம் எழுந்திருத்தல்
* ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல்.
* உங்கள் பொழுதுபோக்கிற்கு நேரம் ஒதுக்குதல்.
* உடமைகளை சுத்தமாக வைத்திருத்தல்
* அதிக தண்ணீர் குடித்தல்
* ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுதல்
* செல்போன் பயன்படுத்துவதை குறைத்தல்
புத்தகங்கள் வாசித்தல் : வாசிப்புப் பழக்கம் பல்வேறு தலைப்புகளில் உங்கள் அறிவை மேம்படுத்த உதவும். ஆண்டு முழுவதும் உத்வேகத்துடன் இருக்க, நீங்கள் புத்தகக் க்லப்களில் சேரலாம் அல்லது மின் புத்தகங்களை வாங்கலாம். அவை அறிஞர்கள் எழுதிய புத்தகங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கதை புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை படித்து உங்கள் கற்பனை திறனை வளர்த்துக்கொள்ளலாம்.
பயணம் செய்தல் : பயணம் உங்களை உற்சாகப்படுத்துகிறது. அந்த வகையில் நீங்கள் உங்கள் கனவு இலக்குகளை நிறைவேற்றுவதில் இருந்து உங்களைத் தடுத்து நிறுத்திய காரணங்களுக்காக வேலை செய்ய சரியான ஆண்டாக இருக்கும்.
உடற்பயிற்சி : நீங்கள் உங்களை ஒரு ஃபிட்டான மற்றும் ஆரோக்கியமான நபராக பார்க்க விரும்பினால், பிறக்க போகும் இந்த வருடம் முதல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்..
பட்ஜெட் : அடுத்த ஆண்டு, உங்கள் வரவு செலவுகளை எப்படி கையாள்வது என்று திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். இப்படி திட்டமிட்டால் உங்கள் கண்களுக்கு தேவையற்ற செலவுகள் தெரியும். இதனால் நீங்கள் பல வகைகளில் சேமிக்கவும் செய்யலாம்.
Read more ; பிரதமர் மோடி குவைத் பயணம்!. 43 ஆண்டுகளில் முதல் இந்திய பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வரலாற்று சிறப்பு!.