fbpx

மனுபாக்கர் – நீரஜ் சோப்ரா திருமணம்..!! வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்த மனுபாக்கர் தந்தை..!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா நேற்றுடன்  நிறைவு பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனுபாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்..

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், மனுபாக்காரின் தந்தை ராம் கிஷன் பாக்கர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “மனுபாக்கர் இன்னும் சின்னபொண்ணுதான். அவருக்கு இன்னும் திருமண வயதுகூட ஆகவில்லை. ஆகையால், நான் இப்போது அதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. மேலும், மனுபாக்கரின் தாய் சுமேதா பாக்க, நீரஜை தன் மகனைப்போலவே கருதுகிறார்” எனத் தெரிவித்துள்ளார். அதுபோல் நீரஜ் சோப்ராவின் மாமாவும் இதுதொடர்பாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “நீரஜ் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டுவந்து, அதை நாட்டிற்கும் தெரியப்படுத்தியதுபோல, அவரது திருமணம் செய்துகொள்வதும் உலகத்திற்கு தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Read more ; ஜியோவின் அதிரடி அறிவிப்பு..!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!! என்ன தெரியுமா..?!

English Summary

As the news of Manubakar and Neeraj Chopra getting married went viral, Manubakar’s father put an end to the rumours.

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு..!!  சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Tue Aug 13 , 2024
The Calcutta High Court on Tuesday rapped the West Bengal government over the alleged rape and murder of a postgraduate trainee doctor at Kolkata's RG Kar Medical College and Hospital

You May Like