அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தலைவர் யார் என அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் சோனியா காந்தி குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர் என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.