தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021, ஆகஸ்ட் 26 அன்று இஷ்ரம் தளத்தை (eshram.gov.in) தொடங்கியது. இது ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குகிறது. இஷ்ரம் தளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த கணக்கு எண் மற்றும் இஷ்ரம் அட்டைகளை வழங்குவதன் மூலம் பதிவு செய்து ஆதரிப்பதாகும்.
26.07.2024 நிலவரப்படி, 29.83 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சுயமாக தாக்கல் செய்தல் அடிப்படையில் பதிவு செய்து இஷ்ரம் அட்டைகளைப் பெற்றுள்ளனர். இஷ்ரம் இணையத்தில் உருவாக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் eShram போர்ட்டல் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், தளத்தில் பதிவு முழுமையாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. எந்தவொரு அமைப்புசாரா தொழிலாளரும், சுயமாக தாக்கல் அடிப்படையில் பதிவு செய்யலாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப விவரங்களை அறிய இஷ்ராமில் வகை செய்யப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்களின் விவரங்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதி இஷ்ரமில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அந்தந்த கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் ஷவாரியங்களில் பதிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.