fbpx

ஓடும் ரயிலில் ஆர்பிஎஃப்  வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ..!

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஸ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு ஆர்பிஎஃப் துணை உதவி காவல் ஆய்வாளர் மற்றும் மூன்று பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேரை சுட்டுவிட்டு தஹிசார் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்த ஆர்பிஎஃப் காவலர் அங்கிருந்த காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து பிடிபட்ட வீரரிடம் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேத்தன் குமாரிடம் நடத்திய விசாரணயில் ”தன்னுடன் பயணித்த உயர் அதிகாரியை சுட்டுக்கொன்ற பின், பக்கத்து பெட்டிக்கு சென்று அங்கிருந்த பயணிகள் மீது அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடதியதும்” அதில் 3 பேர் உயிரிழந்ததும் அம்பலமாகியுள்ளது. காலை 5 மணியளவில் ரயிலின் B5 கோச்சில் இந்த சம்பவம் நடந்ததும், தாக்குதல் நடத்திய காவலருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maha

Next Post

ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டது ஒரு குற்றமா…..? தந்தையின் கழுத்தில் குத்தி கொலை செய்த மகள்…..!

Mon Jul 31 , 2023
தற்போதைய இளம் தலைமுறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இருக்க விரும்புவதில்லை. அவர்களை பொறுத்தவரையில் எப்போதும் சுதந்திர பறவைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுடைய சுதந்திரத்திற்கு தடை விதிப்பது யாராக இருந்தாலும், அவர்களை தங்களுடைய மிகப்பெரிய எதிரியாகவே பார்க்க தொடங்கி விடுகிறார்கள். .அந்த விதத்தில், ஹைதராபாத் அருகே நடைபெற்ற ஒரு பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஆம்பூர் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசிராம் நகரில் ஒரு பயங்கர சம்பவம் […]

You May Like