fbpx

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்!… மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி சாதனை!… 4-வது முறையாக சாம்பியன்!

7-வது ஆசிய ஹாக்கி தொடர் போட்டியில், இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளது.

7வது ஆசிய ஹாக்கி தொடர் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்ற லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் மலேசியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில், ஜப்பான் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதுபோல் மலேசிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தநிலையில், சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – மலேசியா அணிகள் மோதின. இப்போட்டியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நேற்றிரவு 8.30-க்கு தொடங்கிய ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலை அடித்து முன்னிலை பெற்றது. பின்னர் 14 ஆவது நிமிடத்தில் மலேசியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு சென்றது.

ஆட்டத்தின் 18 மற்றும் 28 ஆகிய நிமிடங்களில் மலேசியா அடுத்தடுத்து கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற்றது. இதன்பின்னர் 44 ஆவது நிமிடம் வரையில் கோல் விழாததால் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் பதற்றம் காணப்பட்டது. இதன்பின்னர் அடுத்தடுத்து 2 கோலை அடிக்க, ஆட்டம் 3-3 என சமநிலைக்கு சென்றது. இந்த பரபரப்புக்கு மத்தியில் இந்தி அணி வீரர் அகாஷ்தீப் ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய ஹாக்கி தொடரில் 4 முறை சாம்பியன் பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

Kokila

Next Post

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை!… ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Sun Aug 13 , 2023
இமயமலை, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 2 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாகவும். பொதுமக்கள் தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது. அதேபோன்று, உத்தரகண்டில் ஆக.12, 15, 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. […]

You May Like