fbpx

இன்றுடன் நிறைவடையும் ஆசிய தடகள போட்டி!… இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி!… புள்ளிப்பட்டியலில் 3வது இடம்!

ஆசிய தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் தனது கடைசி முயற்சியில் 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பத்தம் வென்றார். அத்துடன் அவர் அடுத்த ஆண்டு (2024) பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 8.27 மீட்டராகும். இதில் சீன தைபே வீரர் யு தாங் லின் (8.40 மீட்டர்) தங்கப்பதக்கமும், சீனாவின் ஜாங் மிங்குன் (8.08 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

கேரளாவை சேர்ந்த 24 வயதான ஸ்ரீசங்கர் கடந்த மாதம் நடந்த தேசிய தடகள போட்டியில் 8.41 மீட்டர் தாண்டியதன் மூலம் புடாபெஸ்டில் அடுத்த மாதம் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் 49.09 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றார். கத்தார் வீரர் முகமது ஹிமிடா (48.64 வினாடி) தங்கப்பதக்கமும், ஜப்பான் வீரர் யுசாகு கோடாமா (48.96 வினாடி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீரர் யாஷஸ் பாலாக்ஷா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிறகு விலகினார்.

உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷார் (2.26 மீட்டர்) வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். தென்கொரியா வீரர் வூ சாங்யோக் 2.28 மீட்டர் தூரம் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இன்றுடன் நிறைவு பெறும் இந்த போட்டியில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஜப்பான் 29 பதக்கங்களுடன் (11 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம்) முதலிடத்திலும், சீனா 17 பதக்கங்களுடன் (6 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம்) 2-வது இடத்திலும் உள்ளன.

Kokila

Next Post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்!... கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வி!

Sun Jul 16 , 2023
அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலியிறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலியிறுதி சுற்றில் உலக தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சிந்து, காவோ பாங்ஜிசுங் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 20-22 , 13-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். […]

You May Like