fbpx

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்!… இறுதிப்போட்டியில் இந்தியா – மலேசியா அணிகள் இன்று மோதல்!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.
இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டு இந்திய அணி விளையாட உள்ளது.

Kokila

Next Post

மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும்!… துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Sat Aug 12 , 2023
மீன் உணவை சைவத்தில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் பேசிய […]

You May Like