ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை சீனா வென்றது.
அதன்படி, இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா, 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சீனா 105 தங்கம், 63 வெள்ளி, 32 வெண்கலம் என இதுவரை மொத்தம் 200 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இதுபோன்று, ஜப்பான் 27 தங்கம், 35 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல், கொரியா 26 தங்கம், 28 வெள்ளி, 48 வெண்கலம் பெற்று பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.