fbpx

ஆசிய விளையாட்டு போட்டி!… இந்திய அணி கேப்டன் தவான், பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மன்?

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் இந்திய ஆடவர் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் விளையாட இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என இருக்கிற நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023-ல் இந்திய அணி களமிறங்குகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் என்பது ஐசிசியிலோ அல்லது சர்வதேச கிரிக்கெட்டின் கீழ் வராது என்றாலும், வெற்றியின் அடிப்படையில் பதக்கங்கள் வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஆடவர் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தவான் தலைமையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அஷ்வினை இந்திய அணிக்கு கேப்டனாக்க வேண்டும்!... தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!

Sun Jul 2 , 2023
இந்திய அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஷ்வினை நியமிக்க வேண்டும் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணி குறித்து சில விஸஹ்யங்களை பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஆசிய போட்டிகளில் விளையாட B அணியை தான் பிசிசிஐ அனுப்பும் என நினைக்கிறன். இதுபோன்று, இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் […]

You May Like