fbpx

ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி போட்டி!… பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!… உலக கோப்பை தொடருக்கும் தகுதி!

ஆசியக்கோப்பை ஆண்கள் 5 பேர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், உலக கோப்பை தொடருக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

5 பேர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கு தகுதிச்சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தொடரில் லீக் சுற்று முடிவில் 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி உடன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 10-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது. இந்தப் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமன் ஆன நிலையில் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 6-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

குட் நியூஸ்...! LKG, UKG ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 விதம் பிழைப்பூதியம்...! தமிழக அரசு உத்தரவு...!

Sun Sep 3 , 2023
LKG, UKG ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 விதம் பிழைப்பூதியம் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் வழங்க கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மற்றும் ஜூலை 2023 சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கப்பட்டது. தற்பொழுது […]

You May Like