fbpx

’சூரியகுமார் ஆடுவது இன்னைக்கு வேணும்னா நல்லாயிருக்கும், ஆனால்’’ …

சூரியகுமார் யாதவ் பேட்டிங் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா.

இந்திய அணிக்கு நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்ய யார் சரியாக இருப்பார் என்ற கேள்விகள் தொடர்ந்து நிலவி வந்தன. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்னர் ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, அஜங்கியா ரகானே மற்றும் சில போட்டிகளில் விஜய் ஷங்கர் உள்ளிட்ட பலரையும் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தியது. ஆனால் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை

கடந்த ஓராண்டாக அந்த இடத்தை நிரப்புவதற்கு சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்து வந்த இவர், தற்போது டி20 தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் மட்டும் இதுவரை 700 ரன்களுக்கும் மேல் அடித்து அடித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விலாசினார். மேற்கிந்திய தீவுகள் தொடர், ஆசிய கோப்பை தொடர் மற்றும் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முக்கியமான கட்டத்தில் களமிறங்கி அரைசதம் அடித்தார்.

இப்படி தொடர்ச்சியான பங்களிப்பை கொடுத்து வரும் இவரது பேட்டிங்கை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் அதீதமாக நம்புகின்றனர். டி20 உலக கோப்பையிலும் கவனிக்கத்தக்க வீரராக இவர் இருக்கிறார். இந்நிலையில் இவரது பேட்டிங் அணுகுமுறை முற்றிலுமாக சரியில்லை, எந்த நேரத்திலும் இந்திய அணிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிற கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெக்ரா. அவர் கூறுகையில்,

“சூரியகுமார் பேட்டிங் அணுகுமுறை இருமுனை கத்தி போன்றது. ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடினாலும், மற்ற போட்டிகளில் முற்றிலுமாக இந்திய அணியை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு மோசமானதாக அமையலாம். நன்றாக பேட்டிங் விளையாடக்கூடிய மைதானங்களில் இவரது அணுகுமுறை சரியாக இருக்கும். பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்தில் இவரது அணுகுமுறை இந்திய அணிக்கு தலைகீழாக அமைந்துவிடும்.

குறிப்பாக திருவனந்தபுரம் மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆட்டம் இழந்தபோது இவரது அணுகுமுறையால் எளிதாக விக்கெட்டை இழந்திருக்கக்கூடும். தென் ஆப்பிரிக்க வீரர்கள் பந்துவீச்சின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததால் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்து விட்டது.” என்ற கருத்து தெரிவித்தார்.

Next Post

வீட்டுக் கடன் EMI செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்..! முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Sat Oct 1 , 2022
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மக்களின் வாழ்நாள் கனவு, ஆனால் சொந்த வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை. சொந்த வீடு வாங்க இன்று வங்கிகளில் மிகவும் எளிதாகக் கடன் கிடைத்தாலும், 15-30 வருடம் என நீண்ட காலக் கடனாக உள்ளது. நம்முடைய வாழ்க்கை என்பது எப்போது ஓரே நிலையில் இருக்காது கட்டாயம் ஏற்ற இறக்கம் இருக்கும். சொந்த வீடு சொந்த வீடு வாங்கும் போது கடன் […]

You May Like