தாஜ்மஹாலை இடித்து விட்டு இந்து கோவில் கட்ட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ தெரிவித்த கருத்து நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ரூப்ஜோதி குருமி ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தாஜ்மஹால் ஒன்றும் காதலின் சின்னம் இல்லை என்றும் தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் ஆகிய இரண்டையும் எடுத்துவிட்டு இந்து கோவில்களை அங்கே கட்ட வேண்டும் என்று கடுமையாக பேசியிருக்கிறார். 1526 ஆம் ஆண்டு முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்த பின்பு தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளனர். அதை இந்து மன்னர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் தான் தாஜ்மஹாலை கட்டியிருக்கிறார் ஷாஜகான் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ஷாஜகான் தான் மணந்த ஏழு மனைவிகளில் நான்காவது மனைவிக்கு மட்டும் தான் தாஜ்மஹாலை கட்டியிருக்கிறார். அவர் மும்தாஜை மிகவும் காதலித்திருந்தால் அதற்குப் பிறகு ஏன் மூன்று மனைவிகளை திருமணம் செய்துள்ளார் எனது கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆகவே தாஜ்மஹால் என்பது காதலின் சின்னமல்ல என்ன குறிப்பிட்ட பாஜக எம்எல்ஏ குதுப்மினார் மற்றும் தாஜ்மஹால் ஆகியவற்றை இடித்துவிட்டு அங்கு இந்து கோயில்கள் கட்ட வேண்டும் என்ற சர்ச்சை கருத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளார் இவற்றை இடித்து விட்டு கோவில்களை கட்டுவதற்கு எனது ஓராண்டு சம்பளத்தையும் நன்கொடையாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் அசாம் எம்எல்ஏ. சமீபகாலமாகவே வலதுசாரி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுபோன்ற கருத்துக்களை சமூகத்தில் பரவி வருவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது போன்ற கருத்துக்கள் சிறுபான்மையினர் மத்தியிலும் அவர்களது வழிபாட்டு சுதந்திரத்தையும் கேள்வி எழுப்புவதை போன்று அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.