கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் துடியலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் இல்லாத சமயத்தில் அவரின் 17 வயது மற்றும் 19 வயது மகள்களை பாலியல் ரீதியாக துரைராஜ் துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமிகள் வீட்டில் இருந்து வெளியேறினர். இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து அவரது தாயார் மத்திய மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் வேறு ஒரு நண்பர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 2 சிறுமிகளையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உதவி ஆய்வாளர் துரைராஜ், 2 சிறுமிகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்தும், அவரது தொந்தரவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்த காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.