திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், புதுச்சேரி, ஜெயமூர்த்தி ராஜா நகர், ஜினியர் காலணியை சேர்ந்த 48 வயதான குமார் என்பவர் பொருளாதாரத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் குமார், முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு தொலைப்பேசி மூலமாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார் அந்த மாணவியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, தவறான முறையில்
பேசியுள்ளார்.
மேலும், நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து புதுச்சேரிக்குப் போகலாம் எனக் கூறி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மாணவி மறுத்துவிட்டார். மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் சிறுமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையடுத்து, மாணவி நடந்த சம்பவத்தை குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து உடனடியாக திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பேராசிரியர் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Read more: வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிற்கு கத்திக்குத்து; குற்றவாளி அளித்த பகிர் வாக்குமூலம்..