வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேப் போல் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி இருக்க வேண்டும். தவறான திசையில் பொருட்கள் வைக்கப்பட்டால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வைக்கும். எனவே எந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதாக இருந்தாலும், அவற்றை வாஸ்து பார்த்து வைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தில், துடைப்பம் மிகவும் புனிதமானது என்று நம்பப்படுகிறது. துடைப்பம் வாங்குவதற்கு உகந்த நாட்கள், அதை தவிர்க்க வேண்டிய நாட்களும் உள்ளன. அதை கவனமாகக் கையாண்டு சரியான இடத்தில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம், பணத்தை பெருக்குவதுடன், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறலாம்.
எந்த திசையில் வைக்க வேண்டும்? வாஸ்துவின் படி, வீட்டின் தென்மேற்குப் பகுதி துடைப்பத்திற்கு ஏற்ற இடமாகும். துடைப்பத்தை இந்த திசை நோக்கி வைப்பது பண ஓட்டத்திற்கு உதவுகிறது. அதே நேரம் துடைப்பத்தை வைக்க வடகிழக்கு திசை மிக மோசமான இடம்.
துடைப்பம் மறைவான இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதோடு, அது தலைகீழாகவோ அல்லது நிமிர்ந்து நிற்கவோ கூடாது என்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். துடைப்பத்தை எப்போதும் கிடைமட்டமாக வைக்க வேண்டும். இது பணத்தின் நிலையான ஓட்டத்தைக் குறிக்கிறது. வாஸ்து தோஷம் பற்றி பேசும்போது, பால்கனி அல்லது மொட்டை மாடியில் துடைப்பத்தை வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது லட்சுமி தேவிக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது. ம
இரவில் துடைப்பத்தை வைக்க வேண்டிய இடம்
துடைப்பத்தை வீட்டிற்கு வெளியே வைப்பது நல்லது, இரவில் முன் வாசலில் வைப்பது நல்லது. முன் வாசலுக்கு வெளியே துடைப்பத்தை வைத்திருப்பதன் முழு நோக்கமும் கெட்ட சக்தியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதாகும். ஆனால் சூரியன் உதிக்கும் முன் துடைப்பம் வீட்டிற்குள் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.
எந்த நாட்களில் துடைப்பத்தை வாங்கலாம் ?
நீங்கள் ஒரு புதிய துடைப்பத்தை வாங்க விரும்பினால் வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். சனிக்கிழமை உங்கள் துடைப்பங்களை மாற்றுவதற்கு ஏற்ற நாள். கிருஷ்ண பக்ஷத்தின் போதும் நீங்கள் ஒரு துடைப்பத்தை வாங்கலாம். சுக்ல பக்ஷத்தின் போது அதை வாங்குவது அசுபமாகக் கருதப்படுகிறது.
Read more: திருமண வயதை 18 ஆக குறைக்கும் நேபாள அரசு.. என்ன காரணம் தெரியுமா..?