fbpx

’நைட்டு 11 மணிக்கு வர்றேன்’..!! பள்ளி மாணவியிடம் அத்துமீறி ஆசிரியர்..!! பாய்ந்தது போக்சோ..!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், கண்ணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகன் அய்யாசாமி (வயது 39) நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அறிவியல் நடைமுறை வகுப்பு எடுக்க இப்பள்ளிக்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர், 7ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுத்துள்ளார்.

அப்போது அந்த பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், எங்கள் வகுப்பிற்கு எப்போது வருவீர்கள் என்று ஆசிரியரிடம் கேட்ட்டுள்ளார். அதற்கு ஆசிரியர் அய்யாசாமி, “இரவு 11 மணிக்கு வரேன் பாயை எடுத்து வை” என்றுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் உதவியுடன் புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்திய நிலையில், நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியர் அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : ஷாக்…! 3 ரூபாய் மின்சார மானியம் ரத்து… பெட்ரோல், டீசல் வரி உயர்வு…! பஞ்சாப் அரசு அதிரடி

English Summary

Teacher Ayasamy was arrested by the police under the Pokso Act and produced in court and jailed.

Chella

Next Post

அசத்தும் மத்திய அரசு...! ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் நடமாடும் வாகனம்...!

Fri Sep 6 , 2024
A mobile vehicle selling onions for Rs.35 per kg

You May Like