fbpx

மாநிலமே சோகம்…! பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலி…!

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது உள்ள நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் நான்கு நாட்களுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் முன்பு மீண்டும் திறக்கப்பட்ட பாலம், மாலை 6.30 மணியளவில் இடிந்து விழுந்தது. என்ன சமயத்தில் பாலத்தின் மேல் அதிக அளவில் மக்கள் ஒரே அளவில் கூறியதால் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தொங்கு பாலத்தில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சிலர் பாலத்தின் மீது குதித்து விளையாடி கம்பிகளை இழுத்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார். தீபாவளி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முக்கிய சுற்றுலா தலமான பாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மூன்று குழுக்களை மோர்பி மாவட்டத்திற்கு விரைந்து மீண்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

அதிர்ச்சி மரணம்...! முக்கிய பிரபலம் காலமானார்...! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்...!

Mon Oct 31 , 2022
புகழ்பெற்ற கல்வியாளரும், ஸ்ரீ வாணி கல்விச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் நீலம் நாராயணம்மா காலமானார். 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். டாக்டர் நாராயணம்மா ஒரு மருத்துவராக தனது சேவைகளுக்காக மட்டுமல்லாமல், அனந்தபூர் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அவரது சொந்த கிராமமான இல்லூரில் பிற்படுத்தப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக தனது சமூக சேவையை செய்து வந்தார். கில்ட் […]

You May Like