செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (பிப்.26) தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தலைவர் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். அதோடு 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், சுற்றுப்பயணம், தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் 2ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக 2,500 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே விழாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தவெக சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்திற்கு 15 பேர் என்ற அளவில் சுமார் 2,500 பேர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் விழா நடைபெறும் அரங்க இடவசதியை தாண்டி நிர்வாகிகளுக்கு பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 2000 பேர் மட்டும் இருக்க கூடிய அரங்கத்திற்கு 3000 பேருக்கு மேல் பாஸ் வழங்கப்பட்டுள்ளதால், மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் வெளியே காத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 21 வகையான உணவுகள் நிர்வாகிகளுக்கு தயாராகி வருகிறது. கேரட் அல்வா, காலிஃப்ளவர் 65, மசால் வடை, பூரி, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கதம்ப சாம்பார், ரசம், மோர், பாயாசம், கூட்டு, பொறியல், அப்பளம், வெண்ணிலா ஐஸ் கிரீமுடன் சைவ விருந்து தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Read more:மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்தால் கர்ப்பம் ஆவாங்களா..? – நிபுணர்கள் விளக்கம்