fbpx

விடுதலையாகும் நேரத்தில் தப்பியோடிய இளைஞர்..!! 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!!

ஷுனேதிரிக் ஹாஃப்மன் என்ற இளைஞர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டார். 7 ஆண்டுகால சிறை தண்டனை முடிவுக்கு வரும் நிலையில் இருந்ததால், நல் போதனைகளை வழங்கும் நோக்கத்தில் சீர்திருத்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், எஞ்சிய காலத்திற்கு பொறுமை காக்க முடியாமல் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் 3 பேரை பிடித்து துப்பாக்கி முனையில் 3 மணி நேரம் பிணையக் கைதிகளாக வைத்திருந்தார். மேலும், மற்றொரு நபரை தாக்கி, அவர்களது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரை திருடிச் சென்றுள்ளார் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் ஹாஃப்மனை தேட தொடங்கினர். அப்போது அவர் குப்பை தொட்டி ஒன்றில் ஒளிந்திருந்தாராம். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு 40 ஆண்டுகால சிறை தண்டனையை வழங்கப்பட்டது. விடுதலை ஆகுவதற்கு சில மாதங்களே எஞ்சியிருந்த நிலையில், அவர் எதற்காக தப்பித்துச் சென்றார், மீண்டும் எதற்காக குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து, மிஸ்சிஸிப்பி மாகாணத்தில் உள்ள சீர்திருத்த மையத்தின் ஆணையர் பர்ல் கெய்ன் கூறுகையில், ”எதிர்காலத்தில் இதுபோன்று கைதிகள் தப்பித்துச் செல்லாத வகையில் சைரண் பாதுகாப்பு கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இதன் மூலமாக பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த சீர்திருத்த மையத்தில் கைதிகள் பாதுகாப்பை மீறி தப்பித்துச் செல்வது, இது முதல்முறை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வாழ்க்கை முறையில் ஸ்ட்ரெஸ் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக திடீரென்று சாதாரண தனிநபர்கள், கைத்துப்பாக்கியை எடுத்து சக மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனை தடுப்பதற்கு அந்நாட்டு அரசு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

Chella

Next Post

40,000 ரூபாய் சம்பளத்தில்…..! SPMCIL நிறுவனத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு….!

Mon Aug 7 , 2023
மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதனை வேலைவாய்ப்பற்ற, படித்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில், assistant manager பணிகளுக்கு 37 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும். அத்துடன் வயதுவரம்பில் வழங்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் குறித்த விவரங்களை […]

You May Like