பெண்களை மையப்படுத்திய சாவல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை அடல் புத்தாக்கத் திட்டம் தொடங்கியது.
பெண்களை மையப்படுத்திய சாவல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை அடல் புத்தாக்கத் திட்டத்தை நிதி ஆயோக் தொடங்கி வைத்தது. அடல் புதிய இந்தியாவின் சவால்கள் என்ற நடவடிக்கையின் 2ம் கட்ட நிகழ்வாக அடல் புத்தாக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரச்சனை என்ன என்பது குறித்து கண்டு உணர்வது, தேர்ந்தெடுப்பது, ஆதரவளிப்பது, தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நடவடிக்கைகள் மூலம் தீர்வை ஏற்படுத்துவது என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
சமூகத்தை உருவாக்கும் சிற்பியாக பெண்கள் திகழ்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டு, அடல் புதிய இந்தியாவின் சவால்கள் என்ற நடவடிக்கை மூலம் சமூக அமைப்பில் பல்வேறு நிலையில் உள்ள பெண்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். குறிப்பாக, பெண்கள் சுகாதாரம், பாதுகாப்பு, ஊரக பகுதியில் உள்ள பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், தொழில்சார்ந்த கூட்டு நடவடிக்கைகள் போன்றவற்றில் புதுமைகளை புகுத்தி, தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும்..