fbpx

அடேங்கப்பா..!! 15 டிராக்டர்கள்..!! 500 வகையான சீர் வரிசைகள்..!! கெத்து காட்டிய மாப்பிள்ளை வீட்டார்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், இணையத்தில் 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது. அப்படி என்ன விஷேசம் ஒரத்தநாடு பகுதியில் நடந்துள்ளது என்பதை வாங்கப் பார்க்கலாம்.

திருமண பரிசுகள் என்றாலே யாராலும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. புதுமண தம்பதிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் பொக்கிஷமாக இருக்கும் ஒரு தோற்றத்தை உருவாக்குதே இத்தகைய சிறந்த திருமண பரிசுகள்தான். அதேபோல, குடும்பத்தில் சீர்வரிசை என்றால், கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக தருவார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன் வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.

வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவா வேண்டும். வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம். இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான். இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நரிக்குடியில் ஒரு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை சிவாவுக்கு சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் நிறைய ஆர்வமாம்.

அதனால், சிவாவின் நண்பர்கள், அவருக்கு பிடித்த, சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக கொண்டு வந்திருந்தனர். அவர்கள் கையில் சேவல்களையும், கிடாய்களையும் பார்த்ததுமே, மாப்பிள்ளை மணமேடையிலேயே துள்ளி குதித்தார். இதோ இப்போது ஒரு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதைப்பற்றின செய்திகள்தான் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதில் என்ன சிறப்புவென்றால், பொதுவாக பெண் வீட்டார், சீர் வரிசை அளிப்பதுதான் அதிகமாக இருக்கும். ஆனால் பெண்ணை நிச்சயம் செய்யப்போன மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு தருவதற்காக சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். இப்படி ஒரு புதுமை நம்முடைய தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நிகழ்ந்துள்ளது.

ஒரத்தநாடு தாலுகா அருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான மலேசியாவை சேர்ந்த தினோஷாலிக்கும், இருவீட்டு பெரியவர்களும் நிச்சயித்திருந்தார்கள். தினோலிஷாவின் அப்பா ஒரு தொழிலதிபராம். தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான நிச்சயதார்த்த விழாவை பெரியவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்துக்கு சுற்றம்முற்றம் உட்பட அக்கம்பக்கம் பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்தனர்.

நிச்சயாதார்த்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் அருமுளை கிராமத்தில் இருந்து, மொத்தம் 15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் அமர்க்களமாக கிளம்பி வந்தார்கள். அப்போது வாணவேடிக்கை சத்தம், சுற்றுவட்டார பகுதிகளில் எதிரொலித்து கொண்டேயிருந்தது. மாப்பிள்ளையின் சொந்த ஊரான அருமுளையில் இருந்து தாம்பூல தட்டுகளில் பல்வேறு வகையான மலர்கள், பழங்கள், பலகார வகைகள் என சுமார் 500 சீர்வரிசைகள் நிரம்பியிருந்தன. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாண வேடிக்கை, பட்டாசுகள் சத்தம் முழங்கி கொண்டேயிருந்திருக்கிறது. நீண்ட வரிசையில் இந்த சீர்வரிசை ஊர்வலம் சென்றிருக்கிறது.

3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில், அத்தனை பேருக்குமே அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பிரமாண்ட முறையில் நடந்த நிச்சயத்தார்த்த வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது. தாய்மாமன்: வழக்கமாக சீர்வரிசை என்றாலே தாய்மாமன்தான் கண்முன்னே வந்து நிற்பார். ஆனால், இங்கு வருங்கால கணவனே, மாமனாகி விட்டாரே என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமல்ல, நிச்சயதார்த்தமே இப்படியென்றால், கல்யாணம் எப்படி இருக்க போகிறதோ? என்ற ஆர்வத்தையும் ஒரத்தநாடு நிச்சயதார்த்தம் கிளப்பிவிட்டுள்ளது.

Chella

Next Post

அறுவை சிகிச்சைக்குப் பின் எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி..!! உடல்நிலையில் பின்னடைவா..? மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!!

Thu Jun 22 , 2023
பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாகவும் […]

You May Like