பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வர உள்ளதால், பொதுவாக மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போகிப் பண்டிகை அரசு விடுமுறை தினமாகும். ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ஆம் தேதி உழவர் திருநாள் என்று தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக வருகின்றன.
இதற்கு முன்னதாக ஜனவரி 13ஆம் தேதி சனிக்கிழமை மாதத்தின் இரண்டாவது வாரம் என்பதால் அன்றைய தினம் அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்து தரப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதனால் ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
இதனால் அதிக மகிழ்ச்சியில் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தின் 25ஆம் தேதி வியாழக்கிழமை தைப்பூசம் மற்றும் 26ஆம் தேதி குடியரசு தினம் என்று இரண்டு விடுமுறை தினங்கள் தொடர்ச்சியாக வார விடுமுறை தினங்களுக்கு முன்னதாக வரவுள்ளது.