fbpx

அடேங்கப்பா..!! முகேஷ் அம்பானி கார் டிரைவரின் சம்பளம் இத்தனை லட்சமா..? வியக்க வைக்கும் வருமானம்..!!

அம்பானி குடும்பம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். இவர்களின் அண்டிலியா வீடுதான் இந்தியாவிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட நிகழ்கால வீடு ஆகும். அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014இல் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் இந்த வீடுதான் முதலிடம் பிடித்தது. இதை கட்ட மட்டும் 60 மில்லியன் டாலர் செலவு ஆனது. இப்படிப்பட்ட நிலையில்தான் முகேஷ் அம்பானி கார் ஓட்டுநரின் வருமானம் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

முகேஷ் அம்பானியின் டிரைவர் ஆவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அவருக்கு என்று ஒரு டிரைவர் படையே இருக்கிறது. அதில் தலைமை டிரைவர் ஒருவர்தான் எப்போதும் வண்டியை ஓட்டி வருகிறார். பாதுகாப்பு கருதி இவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பல்வேறு சோதனைகள், பயிற்சிகள், பல நாள் ஆலோசனைகள் எல்லாம் கொடுக்கப்பட்ட பின்புதான் இவரை பணிக்கு எடுப்பார்கள். பாதுகாப்பு பயிற்சி மட்டுமின்றி பல்வேறு மொழிகள் பேசுவது, அவசரத்தில் சமயோஜிதமாக முடிவு எடுப்பது என்று ஒரு முதல்வரின் பாதுகாவலருக்கு கொடுக்கப்படும் பயிற்சிக்கு இணையாக இவருக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இவரின் தலைமை டிரைவருக்கு 2-3 லட்சம் ரூபாய் வருமானம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற டிரைவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல ஐடி நிறுவனங்களில், மத்திய அரசு வேளைகளில் இருப்பவர்கள் கூட இவ்வளவு சம்பளம் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட ஒரு பொஷிஷன் செல்லும் வரை இவ்வளவு சம்பளம் கிடைக்காது. ஆனால், அம்பானியின் டிரைவர்கள் மிக எளிதாக 2 லட்சம் வரை வருமானம் ஈட்டுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

"எவன் பார்த்த வேலைடா இது"? திருடிய கடை வாசலில் மலம் கழித்த திருடன்!

Wed Mar 1 , 2023
திருப்பூரில் கடைகளில் திருடியது எவன் பார்த்த வேலைடா இது ….. திருடிய கடையில் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு கடை வாசலில் மலம் கழித்த திருடன் … திருப்பூரில் அதிர்ச்சி!மட்டுமல்லாமல் திருடிய கடை வாசலிலேயே மலம் கழித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரின் கேவிஆர் நகர் பகுதியில் திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி கடைகள் மளிகை கடைகள் என […]

You May Like