தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜீவா. தொடர்ந்து தித்திக்குதே, ராம், டிஷ்யூம் தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் எந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே, தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என காத்திருக்கிறார்.
தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஜீவா நடித்து வருகிறார். இந்நிலையில், ஜீவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஜீவா ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி சொந்தமாக ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.95 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.