fbpx

அடேங்கப்பா..!! கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!! ஒரு கிலோ இவ்வளவா..? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

பூக்களின் வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் மொத்த விற்பனை விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் முகூர்த்த நாள் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை காரணமாகவும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலையை பொருத்தமட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.1800 முதல் ரூ.2000 வரையிலும், சாதிமல்லி கிலோ ரூ.600 முதல் ரூ.650 வரையிலும், முல்லை ரூ.900 முதல் ரூ.1000 வரையிலும், கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடேங்கப்பா..!! கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!! ஒரு கிலோ இவ்வளவா..? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

பன்னீர் ரோஜா கிலோ ரூ.120-க்கும், சாமந்தி ரூ.50 முதல் ரூ.80 வரை, சாக்லெட் ரோஸ் ரூ.160-க்கு விற்கப்படுகிறது. அதே போன்று பிச்சிப்பூ கிலோ ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையிலேயே பூக்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் சில்லறை விற்பனையில் பூக்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வரவுள்ள நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என கோயம்பேடு மலர் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

’தம்பி காப்பாத்து’..!! அக்காவுக்கு லவ் டார்ச்சர்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர்..!!

Sun Dec 4 , 2022
இளம்பெண்னை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞரை பெண்ணின் தம்பி உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆவடி அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இதே கடையில் பணியாற்றி வரும் மணிகண்டன் (20) என்பவர் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பலமுறை பின் தொடர்ந்து […]
’தம்பி காப்பாத்து’..!! அக்காவுக்கு லவ் டார்ச்சர்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர்..!!

You May Like