fbpx

Anbil mahesh: அடிதூள்!… எதிர்கால பள்ளிக்கல்வியை வழிநடத்த கொண்டுவரப்படும் மெகா மாற்றம்!… அமைச்சர் அதிரடி பேச்சு!

Anbil mahesh:எதிர்கால பள்ளிக்கல்வியை உருமாற்றவும், வழிநடத்தவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அடுத்த சிறுசேரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நமது பள்ளிக் கல்வி முறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவில் நம் குழந்தைகளை எப்படி இணைத்துக் கல்வி கற்பிக்க போகிறோம் என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். நாம் அறிவுப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதன் மூலம் தமிழ்நாடு உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் கையெழுத்திட்ட ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆண்டில் இந்த தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் வாய்ப்பு என்ற திட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக 12 அரசுப் பள்ளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் மூலம் 4,226 மாணவ மாணவியர் பயன்பெற்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த பயிற்சி பட்டறையின் மூலம் திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 40 ஆயிரம் மணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பள்ளிகளில் இருந்து 25 ஆசிரியர்கள் மற்றும் இந்த திட்டத்தின் முதற்கட்ட ஆசிரியர்களுடன் சேர்த்து 114 ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்த 90க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள். இந்த திட்டம் நாளைய தமிழ்நாட்டுக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக இருக்கிறது. நாளைய பள்ளிக்கல்வியை உருமாற்றவும் வழி நடத்தவும் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.

Readmore: அண்ணாமலை சுழலில் திமுகவில் 10 விக்கெட்டுகள் கன்பார்ம்!… தேர்தலுக்குள் நடக்கும்!… சொன்னது யார் தெரியுமா?

Kokila

Next Post

ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பூண்டு.! இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.!?

Wed Feb 28 , 2024
பொதுவாக நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்தே பல மருத்துவங்களை நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் நாம் அடிக்கடி உணவுகளில் பயன்படுத்தி வரும் பூண்டு, பயன்படுத்தி பலவகையான நோய்களை தீர்க்கலாம் என்று கூறியுள்ளனர். பூண்டு என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதையும், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்? பூண்டில் ஆண்டி ஆக்சிடெண்ட், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், நார்ச்சத்து, சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் […]

You May Like