fbpx

அட்லீ – சல்மான் கான் ரூ.650 கோடி பிரம்மாண்ட படம் நிறுத்தி வைப்பு… ரஜினி தான் காரணமா..?

தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை அட்லீ வழங்கினார்.

இதை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.

தற்போது பான் இந்தியா இயக்குனராக வலம் வரும் அட்லீ, சல்மான் கானை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்த படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஹீரோக்கள் கொண்ட ஒரு பிரமாண்டமான படமாக கருதப்பட்ட இந்த படம், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்களை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சல்மான் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், இரண்டாவது நாயகனைத் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் இந்த கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் கமல்ஹாசனுக்கு பதில் ரஜினி இதில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ரஜினிகாந்த் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனால் 2026 வரை ரஜினி பிஸியாக இருப்பதால் அவரால் அட்லீ இயக்கும் படத்திற்கு கால்ஷீட் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ரஜினி, கமல் என இரண்டு சூப்பர்ஸ்டார்களும் நடிக்க முடியாததால் ஹாலிவுட் நட்சத்திரத்தை இந்த படத்தில் நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்ததாக கூறப்படுகிறது. அதன்படி நடிக்க ஹாலிவுட் நட்சத்திரம் சில்வெஸ்டர் ஸ்டலோனுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டன. இருப்பினும், நிதி பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை, இது படத்தின் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டது.

ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனுக்கு ஏற்ற மாற்று இல்லாததால், அட்லீ, சல்மான் கான் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டாக இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் மறுபிறவி அடிப்படையிலான ஒரு பீரியாடிக்கல் படமாக சல்மான் கான் நடிக்கும் படம் உருவாக இருந்தது. இயக்குனரின் சம்பளம் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகள் தவிர்த்து தோராயமாக ரூ. 650 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது.. படத்தின் ரீச் மற்றும் வணிக ரீதியான நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, தயாரிப்பாளர்கள் சல்மான் கானுடன் ஒரு சிறந்த தென்னிந்திய சூப்பர் ஸ்டாரை நடிக்க வைக்க ஆர்வமாக இருந்தனர்.

அதற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறந்த தேர்வுகளாக இருந்தனர். ஆனால் இரு நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க முடியாததால் இந்த படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. டாப் 10 படங்கள் லிஸ்டில் இடம்பெற்று அசத்தல்..

English Summary

Reports have already surfaced that Atlee is set to direct his next film with Salman Khan.

Rupa

Next Post

கேம்பிரிட்ஜில் இரண்டு முறை தோல்வியடைந்த ராஜீவ் காந்தி எப்படி பிரதமராக முடியும்..? - காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை

Wed Mar 5 , 2025
'Failed Twice But Became PM': Mani Shankar Aiyar’s Remark On Rajiv Gandhi Sparks Row

You May Like