fbpx

மீண்டும் அட்டூழியம்..!! ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான 6 பேரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

Chella

Next Post

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்..!! அடியோடு சாய்ந்த வீடுகள்..!! அலறி ஓடிய மக்கள்..!! ரயில் சேவை முடக்கம்..!!

Tue Jan 23 , 2024
சீனாவில் நேற்று நள்ளிரவில் 7.2 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், பொதுமக்களும் சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் தான், நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி என்சிஆர் […]

You May Like