fbpx

அகதிகள் முகாம் மீது தாக்குதல்..!! காசாவில் இன அழிப்பு..!! தடுக்க தவறிய ஐநா..!! இயக்குனர் திடீர் ராஜினாமா..!!

காசா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, காசாவில் இனஅழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் இப்ராஹிம் பியாரி. இவரை குறிவைத்து தரையிலும், வான்வழியிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் – காசா போர் தொடங்கி 26 நாட்களான நிலையில், காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. மருத்துவமனையை தொடர்ந்து அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் குண்டு வீசுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால்ம் காசாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர், பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதால், அப்பாவி உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாது நேர்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும், அதனைத் தடுக்க ஐநா தவறிவிட்டதாகவும், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ”ஹமாஸ் அழிப்புப் போர்வையில் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை வீழ்த்துகிறது” என்று ஹமாஸ் தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையை தொடர்ந்து அகதிகள் முகாம் மீதும் குண்டு வீசப்படுவதை இதற்கு ஆதாரமாக ஹமாஸ் தெரிவிக்கிறது.

Chella

Next Post

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

Wed Nov 1 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி […]

You May Like