ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட துணை நடிகை தாக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மணிகண்டனின் ஆதரவாளர்கள் சாந்தினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் நடத்தக்கூடாது எனவும் உடனடியாக இடத்தை விட்டு நகரும்படியும் அவர்கள் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் சாந்தினி மீது தாக்குதல்நடத்தினர். காயம் அடைந்த நடிகை சாந்தினி மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே அவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்., ’‘ என்னை தாக்கியவர்கள் மீதும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’ என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக அவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் மிக நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர் ஏமாற்றிவிட்டதாகவும் கடந்த 5 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். மூன்று முறை கருவுற்றேன். கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டார். ’’ என சாந்தினி புகார் அளித்திருந்தார்.
நாடோடிகள் படத்தில் துணை நடிகை சாந்தினி நடித்துள்ளார். அதில் இரண்டு பேர் காதலர்களாக நடித்திருப்பார்கள் அவர்களை சேர்த்து வைக்க சசிகுமார் மற்றும் அவர்களின் நண்பர்கள் போராடுவார்கள். போராடி காதலை சேர்த்து வைத்த நிலையில் காதலர்கள் இருவரும் கொஞ்சம் நாள் கில்மாவாக இருந்துவிட்டு பின்னர் அவரவர் வாழ்க்கையை தனித்தனியே அமைத்துக்கொள்ள முடிவு செய்வார்கள். அந்த படத்தின் காதலி கதாபாத்திரத்தில் சாந்தினி நடித்திருக்கின்றார். இதனால் சாந்தினி பிரபலமானார்.