fbpx

இந்தியர்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது!… பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளோம்!… வெள்ளை மாளிகை!

“மாணவர்கள் மீதான இனம், மதம், பாலினம் உள்பட எந்த வகையான தாக்குதல்களையும் நிச்சயம் பொறுத்து கொள்ள முடியாது. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க பைடன் நிர்வாகம் அனைத்து கடும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வௌிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் முக்கிய தேர்வாக இருப்பது அமெரிக்கா. ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக அரங்கேறி வருகிறது. இது அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது, “மாணவர்கள் மீதான இனம், மதம், பாலினம் உள்பட எந்த வகையான தாக்குதல்களையும் நிச்சயம் பொறுத்து கொள்ள முடியாது. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க பைடன் நிர்வாகம் அனைத்து கடும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிபர் பைடன் தீவிரமாக உள்ளார்” என்று இவ்வாறு கூறினார்.

Kokila

Next Post

ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்தால் இப்படி ஒரு நிலைமையா..? சிறையில் மர்ம மரணமடைந்த அலெக்ஸி நவல்னி..!!

Sat Feb 17 , 2024
மாஸ்கோவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புட்டினில் அலெக்ஸி நவல்னி பிறந்தார். இவர், 1998இல் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். ரஷ்யாவின் புடின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி பேச தொடங்கிய போது அலெக்ஸி நவல்னிக்கு பிரச்சனைகள் தொடங்கியது. தனது தேசியவாதக் கருத்துக்களுக்காக அரசியல் கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த அவர், கிரெம்ளின் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார். […]

You May Like