பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் முன்னாள் துணை முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுக்பீர் சிங் பாதல் தனது ஆதரவாளர்களுடன் வருகை புரிந்து, கழுத்தில் பதாகைகள் அணிந்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அப்போது வயதான நபர் ஒருவர் சுக்பீர் சிங் பாதலை நெருங்கி வந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங் பாதல் நோக்கி சுட முயன்றார். ஆனால், அதற்குள் அவரது ஆதரவாளர் ஒருவர் ஓடிவந்து தக்க சமயத்தில் துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வெளியேறிய நிலையில், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபரை பிடித்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : யாருக்கெல்லாம் ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகை கிடைக்கும்..? விவசாய நிலங்கள், கால்நடைகளுக்கு எவ்வளவு..?