இந்திய ரிசர்வ் வங்கியானது, வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஜனவரியில் தேசிய மற்றும் மண்டல விடுமுறைகள் காரணமாக வங்கிகள் மொத்தம் 11 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல பொது விடுமுறைகள் தவிர, ஜனவரி, குறிப்பிடத்தக்க தேசிய விடுமுறையான குடியரசு தினத்தையும் குறிக்கிறது.
மேலும், ஆண்டு முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. சரி, 2024 ஜனவரியில் வங்கி விடுமுறைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஜனவரி 1 : புத்தாண்டு கொண்டாட்டம்
ஜனவரி 11 : மிசோரமில் மிஷனரி தினம்
ஜனவரி 12 : மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
ஜனவரி 13 : பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் லோஹ்ரி கொண்டாட்டம்
ஜனவரி 14 : மகர சங்கராந்தி கொண்டாட்டம்
ஜனவரி 15 : பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
ஜனவரி 16 : மேற்கு வங்கம் மற்றும் அசாமில் துசு பூஜை கொண்டாட்டம்
ஜனவரி 17 : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி பல மாநிலங்களில் கொண்டாடப்படும்
ஜனவரி 23 : சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி பல மாநிலங்களில் கொண்டாடப்படும்
ஜனவரி 26 : குடியரசு தின கொண்டாட்டம்
ஜனவரி 31 : அஸ்ஸாமில் மீ-டேம்-மீ-பை கொண்டாட்டம்