fbpx

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளும் திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வங்கி நேரப்படி திறந்திருக்க வேண்டும். அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் தடையின்றி வங்கிகள் வழங்க வேண்டும். குறிப்பாக வங்கி கிளைகளில் கவுண்டர் பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும்.

அதன் பிறகு NEFT, RTGS போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகள் வழக்கம்போல் இரவு 12 மணி வரை செயல்பட வேண்டும். நடப்பு நிதியாண்டு 2022-23 மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில், அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் சேவைகளுக்கு மூடப்பட்டிருக்கும். வங்கிகள் திறந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் சேவை வழங்கப்படாது. ஆனால் இந்த நிதி ஆண்டில் மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் வாடிக்கையாளர்கள் சேவைகளை வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து..!! இதுவரை 8 பேர் பலி..!! காஞ்சிபுரம் அருகே பரபரப்பு..!!

Wed Mar 22 , 2023
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் தீக்காயமடைந்தனர். பின்னர், அங்கிருந்தவர்கள் தீக்காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 11 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஐந்து […]

You May Like