fbpx

வங்கி வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!… டிச.31ஆம் தேதிக்குள் முடிச்சுடுங்க!… இல்லனா பிரச்சனைதான்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி தொடர்பான சில பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். உண்மை என்னவென்றால், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அது அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் டிசம்பர் 31க்கு முன் பின்பற்ற வேண்டிய கட்டாயமாகும்.

எனவே உங்களுக்கும் எஸ்பிஐ வங்கியில் கணக்கு இருந்தால், கேஒய்சி சரிபார்ப்பு மற்றும் பேங்க் லாக்கர் ஒப்பந்தம் தொடர்பான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இதை முடிக்காவிட்டால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். கேஒய்சி சரிபார்ப்புக்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனால் நீங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று இந்த வேலையை முடிக்கலாம்.

பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்துடன் சரிபார்ப்பை முடிக்கலாம். வங்கிக்குச் சென்று அங்குள்ள KYC படிவத்தை பூர்த்தி செய்து இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாதவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும்.

வங்கி லாக்கர் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைக்கும் டிசம்பர் 31தான் கடைசி நாள். எனவே உங்களிடம் எஸ்பிஐ வங்கி லாக்கர் இருந்தால் அது தொடர்பான வேலையை டிசம்பர் 31ஆ தேதிக்குள் முடிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, வங்கி லாக்கருக்கான புதிய ஒப்பந்தத்தில் வாடிக்கையாளர்கள் கையெழுத்திடுவது அவசியம். இதுகுறித்து வங்கியில் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் எச்சரிக்கை செய்துள்ளது.

Kokila

Next Post

#Breaking | புரட்டி எடுக்கும் கனமழை..!! 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..!! வெளியான அறிவிப்பு..!!

Mon Dec 18 , 2023
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்துள்ள பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, […]

You May Like