டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத்தேர்வு சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை நடக்கவுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இந்த தேர்வில் சுமார் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர். மூன்று நாள் நடக்கும் இந்த தேர்வில், முதல் நாள் தமிழ் தகுதி தேர்வு நடைபெறும். இந்த தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இதர தாள்கள் திருத்தப்படும். சென்னையில் உள்ள 22 மையங்களில், காலை 9.30 மணி முதல் தேர்வு தொடங்க உள்ளது.
92 காலி பணியிடங்களை நிரப்புவதற்க்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது, சுமார் 1.90லட்சம் பேர் கலந்து கொண்டனர், இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு முதன்மைத் தேர்வு நடக்கவுள்ளது.