தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் மார்ச் 21-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் ஏப்ரல் 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைய உள்ளது. மேலும் விவரங்களை cbse.nic.in என்ற சிபிஎஸ்இ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.