fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி.. பட்ஜெட்டில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி காத்திருக்கிறது.. 7வது ஊதியக் குழு விதிகளுக்குப் பதிலாக 8வது ஊதியக் குழுவைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது.. இந்நிலையில் வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழுவின் அமைப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

இந்த அறிவிப்பு குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8வது ஊதியக் குழுவை அரசு அறிவித்தால், மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்டால் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், ஊதிய அளவு மற்றும் அலவன்ஸ் ஆகியவை அதிகரிக்கும். அவர்கள் எதிர்காலத்தில் அதிகரித்த ஃபிட்மென்ட் காரணி என பல சலுகைகளை பெறுவார்கள்.

சமீபத்திய 5, 6 மற்றும் 7 வது ஊதிய அறிவிப்புகளில் காணப்பட்ட முறைகளின்படி, ஊதிய கமிஷன் விதிகள் பொதுவாக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேம்படுத்தப்படுகின்றன. 2023ல் 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் அறிவித்து அதன் பரிந்துரைகளை 2026க்குள் அமல்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன…

Maha

Next Post

இறுதி வாய்ப்பு...! மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை சிறப்பு முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Sun Jan 29 , 2023
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை சேலத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை கட்டாயம் அனைவரும் இனைக்க வேண்டும் என்கின்ற உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது அரசு. ‌ இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கூடுதல் சிறப்பு முகாம் நாளை காலை 10 […]

You May Like