fbpx

கிரெடிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு.. இனி UPI மூலம் பணம் செலுத்தலாம்.. எப்படி தெரியுமா..?

தற்போது பெரும்பாலானோர் UPI முறை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் எளிதாகவும், விரைவாகவும் பணம் செலுத்த முடியும் என்பதால் பலரின் விருப்பமாக யுபிஐ முறை உள்ளது.. இதை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி அண்மையில் UPI லைட்டை அறிமுகப்படுத்தியது..

UPI லைட் என்றால் என்ன: இந்த UPI லைட்டின் உதவியுடன், பயனர்கள் PIN ஐப் பயன்படுத்தாமல் ரூ.200 வரை பணம் செலுத்த முடியும். மேலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்த RuPay கிரெடிட் கார்டுகளை இப்போது பயன்படுத்தலாம். இனி, RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கார்டை ஸ்வைப் செய்யாமலேயே Pos இயந்திரங்களில் வசதியாக பணம் செலுத்த முடியும்.

UPI லைட்டை யார் பயன்படுத்தலாம்: NPCI இன் படி, BHIM பயன்பாட்டில் UPI லைட் அம்சம் இயக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளன..

முதலில் கிரெடிட் கார்டை UPI உடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தும் போது, ​​கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான தேர்வு உங்களுக்கு இருக்கும். நீங்கள் பணம் செலுத்தத் தொடங்கியவுடன் UPI செயலிகள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பும். OTP ஐ உள்ளிட்டதும் பணம் செலுத்துதல் முடிவடையும்.

Maha

Next Post

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்..? புதிய வீரர்கள் இவர்களா..?

Thu Sep 29 , 2022
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இதனால், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தீபக் ஹூடாவின் காயம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அந்தக் காயம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு மாற்று வீரர் […]
இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதிப் போட்டி..!! மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்..?

You May Like