fbpx

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! 12 நாட்கள் வங்கிகள் செயல்படாது..!! வெளியானது புதிய அறிவிப்பு..!!

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மாதம் தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகி உள்ளது. அதில் மே மாதம் வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட மொத்தம் 12 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலமாக சேவைகள் தடையின்றி வழங்கப்படுகிறது.

வங்கி விடுமுறை பட்டியல்:

01.05.2023 – மே தினம், மகாராஷ்டிரா தினம்

05.05.2023 – புத்த பூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

07.05.2023 – ஞாயிறு விடுமுறை

09.05.2023 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்

13.5.2023 – 2வது சனிக்கிழமை விடுமுறை

14.05.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

16.05.2023 – சிக்கிம் தினம்

21.05.2023 – ஞாயிறு விடுமுறை

22.05.2023 – மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

24.05.2023 – காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி – திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

27.05.2023 – 4வது சனிக்கிழமை விடுமுறை

28.05.2023 – ஞாயிறு விடுமுறை

Chella

Next Post

அடிக்கிற வெயிலுக்கு ஜாலியா டூர் போக நினைக்கிறீங்களா..? தமிழ்நாட்டில் இருக்கும் இந்த இடங்களுக்கு போங்க..!!

Tue Apr 25 , 2023
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அப்போது ஒரு சில இடங்களில் மட்டுமே வெப்பம் சதமடித்து வந்த நிலையில், இப்போது வெப்பத்தின் தாக்கம் மேலும் மோசமாகியுள்ளது. பல இடங்களில் வெப்பம் தொடர்ந்து சதமடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கோடை வெயிலில் இருந்து மக்களைச் சற்று தப்பிக்க வைக்கும் வகையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் […]

You May Like