fbpx

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! இம்மாதம் 12 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது..!! நோட் பண்ணிக்கோங்க..!!

இன்று ஜூன் மாதம் துவங்கி உள்ள நிலையில், இந்த மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் என்பது ஏறக்குறைய நடுத்தர குடும்பத்தினருக்கு புது வருஷத்தைப் போல தான். பள்ளி, கல்லூரி திறப்பு, கட்டணங்கள், டியூஷன் கட்டணங்கள், யூனிபார்ம் வாங்குவது, விடுதிக் கட்டணம், மாதாந்திர பட்ஜெட், சமையல் சிலிண்டர், போக்குவரத்து செலவு என ஏகத்துக்கும் பட்ஜெட் போட்டு பிதுங்கி கொண்டிருக்கும் இல்லத்தரசிகளை, பேங்க் லீவு, ஏடிஎம் வேலைச் செய்யலை என்று மேலும் எரிச்சலாக்காமல், சரியா திட்டமிட்டுக்கோங்க.

பொதுவாகவே வங்கிகளுக்கு வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமையும், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமையும் விடுமுறை தினங்களாக நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், ஜூன் மாதத்தில் 12 தினங்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவில், வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப வேறுபடும். உங்கள் மாநில பண்டிகைகளுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்…

ஜூன் 4, 2023 – ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 10, 2023 – இரண்டாவது சனிக்கிழமை

ஜூன் 11, 2023 – ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 15 , 2023 – ராஜ சக்ராந்தி (மிசோரம் மற்றும் ஒடிசா) வங்கிகளுக்கு விடுமுறை

ஜூன் 18, 2023 – ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 20, 2023 – ரத யாத்திரை (ஒடிசா மற்றும் மணிப்பூர்) வங்கிகளுக்கு விடுமுறை

ஜூன் 24, 2023 – நான்காவது சனிக்கிழமை

ஜூன் 25, 2023 – ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 26, 2023 – கர்ச்சி பூஜை ( திரிபுரா)

ஜூன் 28, 2023 – ஈத் உல்-அஷா (மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா)

ஜூன் 29, 2023 – ஈத் அல்-அதா நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை

ஜூன் 30, 2023 – ரீமா ஈத் உல் அஷா நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை

Chella

Next Post

அதிர்ச்சி...! பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்...! தலைவர் இரங்கல்...!

Thu Jun 1 , 2023
பிரபல மொழியியலாளர் மற்றும் எழுத்தாளரான வெள்ளையணி அர்ஜுனன் காலமானார். மலையாள இலக்கியம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனது முக்கிய பங்களிப்பை வழங்கிய பிரபல மொழியியலாளர் மற்றும் எழுத்தாளரான வெள்ளையணி அர்ஜுனன் காலமானார். அவருக்கு வயது 90. வயது முதிர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். 2008 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. டாக்டர் அர்ஜுனன், கலைக்களஞ்சிய நிறுவனத்தின் […]

You May Like