fbpx

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் இவர்களுக்கு தனி வரிசை…

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இந்த வரலாறு காணாத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும், ஒரு நாளில் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நிற்பதால் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இன்று முதல் சபரி மலை தரிசனத்திற்கு வரும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியவர்களுக்கு தனி வரிசை அமலுக்கு வருகிறது. மேலும் தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களுக்கு பம்பையில் இருந்து நிலக்கல் செல்ல போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kathir

Next Post

சிறந்த முதலீடு..!! தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்..!! எவ்வளவு விலை, எப்படி வாங்கலாம்..?

Mon Dec 19 , 2022
நாட்டில் அடுத்தக்கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டிற்கான 3ஆம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு ரூ.50 […]
சிறந்த முதலீடு..!! தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்..!! எவ்வளவு விலை, எப்படி வாங்கலாம்..?

You May Like