நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய-மாநில அரசுகளின் நிதியுதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படி புதுப்பிக்காதபட்சத்தில், மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுப்பிப்பு பணிகள் 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், நவம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீத பணிகளையும், டிசம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீத பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும். விவரங்கள் புதுப்பிக்கப்படாத பட்சத்தில் அட்டைதாரர்களின் மானியம் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.