தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு வேண்டுமென்றால் எழுத்துப்பூர்வமாக உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வரும் நிலையில், லீவ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியை ஆசிரியர்கள் தங்களின் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தங்களுக்கு விடுப்பு தேவைப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு பதிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சமர்ப்பித்து ஆசிரியர்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.