வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தவறியவர்கள், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் அதை இணைக்கலாம், ஆனால் அதற்கு அபராதக் கட்டணம் ரூ. 1,000. செலுத்த வேண்டும்..

பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது.. அதாவது, மார்ச் 31-ம் தேதிக்குள் இந்த இரண்டு முக்கிய ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் எண் ஏப்ரல் 1 முதல் செயலிழந்துவிடும்.. மேலும், அரசாங்கத்திற்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும்.. பான் செயல்படாததால் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது குறித்து விளக்கமளித்த பொருளாதார நிபுணர் ஒருவர் “ மார்ச் 31, 2022க்குள் ஒரு நபரின் பான் எண் அவர்களின் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், அவர்களின் பான் செயலிழந்துவிடும். இதன் விளைவாக, அந்த நபருக்கான டிடிஎஸ் வரி 20 சதவீதம் அதிகமாக அதிகமாக இருக்கும். வங்கி வைப்பு வட்டி, வாடகைகள், ஆலோசனைக் கட்டணம், கமிஷன்கள், கிரிப்டோகரன்சி அல்லது மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவை மூலம் வருமானத்தில் இருந்து டிடிஎஸ் வரி கழிக்கப்படுகிறது.. பல்வேறு வருமானங்கள் மற்றும் முதலீடுகளில் சாதாரண TDS விகிதம் 1 சதவிகிதம் குறைவாக உள்ளது.

அதாவது, ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் என்றும் அவரது சாதாரண டிடிஎஸ் விகிதம் 10 சதவீதம் என்றும் வைத்துக்கொள்வோம். காலக்கெடுவிற்குள் அவர்களின் பான் எண்ணுடன் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், அவர்களின் பான் செயலிழந்துவிடும், மேலும் டிடிஎஸ் விகிதம் 20 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் அந்த நபர் தனது பான் எண் இணைக்கப்படாததால் ரூ.10 லட்சத்தில் 10 சதவிகிதம் கூடுதல் டிடிஎஸ் செலுத்த வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இது தவிர, மார்ச் 31க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால் பின்வரும் சேவைகளும் நிறுத்தப்படும்:
- செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது
- நிலுவையில் உள்ள வரி அறிக்கைகள் செயலாக்கப்படாது
- செயல்படாத பான் எண்களுக்கு நிலுவையில் உள்ள வரி திரும்பப் பெற முடியாது
- பான் செயலிழந்ததால் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.
உங்கள் ஆதார் அட்டையை பான் எண்ணுடன் இணைப்பது எப்படி:
எஸ்எம்எஸ் மூலம் :
- “UIDPAN என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, 10 இலக்க பான் எண்ணை டைப் செய்யவும்
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி 56161 அல்லது 567678 என்ற எண்ணுக்கு இந்த SMS அனுப்பவும்.
வருமான வரித் துறை இணையதளம் வழியாக
- www.incometaxindia.gov.in/pages/pan.aspx என்ற வருமான வரித்துறை இணையதளத்தைப் பார்வையிடவும்
- Link Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- ஆதார் மற்றும் பான் எண் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்
- பின்னர் கேப்ட்சாவை உள்ளிடவும்
- பின் “Link Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
- அதன் பிறகு உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.