சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி இனி, தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில், ஒலி எழுப்பும் ஹாரண்களை பயன்படுத்தினால் 1,000 ரூபாய் அபராதம், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2,000 ரூபாய் அபராதம், வாகனங்களை ஓட்டுவதற்கு மனரீதியான தகுதி இல்லாமல் இருந்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனங்களை பதிவு செய்யாமல் இயக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் (2500இல் இருந்து 5000ஆக உயர்வு), அபாயகரமான விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், வாகனத்தை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
வாகன பந்தையங்களில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம், சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.