fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் செலுத்தினால் போதும்..

நாட்டில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.. சிஐஐ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார். இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்..

இதுகுறித்து மேலும் பேசிய அவர் “நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் கவனித்து வருகிறது. 6 மாதங்களில் புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் கொண்டு வருவோம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில் தானியங்கி நம்பர் பிளேட் ரெகக்னிஷன் சிஸ்டத்தின் (தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்) ஒரு முன்னோடித் திட்டத்தை நடத்தி வருகிறது.

அரசுக்கு சொந்தமான NHAI சுங்கச்சாவடி வருவாய் தற்போது ரூ.40,000 கோடி என்றும், 2-3 ஆண்டுகளில் இது ரூ.1.40 லட்சம் கோடியாக உயரப் போகிறது. 2018-19 ஆம் ஆண்டில், டோல் பிளாசாவில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 8 நிமிடங்கள் இருந்தது, இருப்பினும், 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் FASTags அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைந்துள்ளது..” என்று தெரிவித்தார்..

ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சிஸ்டம் : ஜிபிஎஸ் அடிப்படையிலான அமைப்பு ஏற்கனவே பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஒரு தொழில்நுட்பமாகும்… ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வரி வசூலிப்பின் கீழ், நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கும் சாதனம் வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும். அத்தகைய வாகனம் கட்டணம் செலுத்தப்பட்ட சாலையில் நுழைந்தவுடன், நெடுஞ்சாலை அமைப்பு வாகனத்தை கண்காணிக்கும்.. மேலும் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் இடத்தில் பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த அமைப்பின் கீழ், ஒரு பயனர் தங்களது விவரங்களையும், தங்கள் வாகனத்தின் விவரங்களையும் வங்கிக் கணக்குகளுடன் பதிவு செய்ய வேண்டும்.. தற்போதுள்ள சுங்கச்சாவடிகளில் உள்ளதைப் போல நிலையான கட்டணங்கள் அல்லாமல் பயணித்த உண்மையான தூரத்திற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், சுங்கக் கட்டணம் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஒரு சுங்கச்சாவடியிலிருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு உள்ள முழு தூரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனம் முழு தூரத்தையும் பயணிக்காமல், வேறு இடத்தில் பயணத்தை முடித்துக் கொண்டாலும், கட்டணம் முழுமையாக செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

பிஎம் மித்ரா பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்...!

Sun Mar 26 , 2023
பிஎம் மித்ரா பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இவை அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் விருதுநகர், தெலங்கானாவில் வாராங்கல், குஜராத்தில் நவ்சாரி என்ற பகுதியிலும், கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியிலும், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ […]

You May Like